ரெயிலில் கஞ்சா கடத்தியவர் கைது
ரெயிலில் கஞ்சா கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
சூரமங்கலம், டிச.17-
சேலம் ரெயில்வே போலீசார் விசாகப்பட்டினம்- கொல்லம் சிறப்பு ரெயிலில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முன்பதிவில்லா ெரயில் பெட்டியில் சந்தேகப்படும்படியான ஒரு பை இருந்தது. அதனை ரெயில்வே போலீசார் சோதனை செய்தனர். 2 பண்டல்களில் 6 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா கடத்தி வந்த கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த அனில்குமார் (வயது 48) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 6 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து சேலம் ரெயில்வே போலீசில் ஒப்படைத்தனர்.