5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கொலை முயற்சி வழக்கு உள்ளிடட பல்வேறு வழக்குகளில் கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2023-02-12 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் ைகதான 5பேர் ஒரே நாளில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கொலை முயற்சி

தூத்துக்குடி முத்து நகர் பீச் ரோட்டை சேர்ந்தவர் கிங்ஸ்டன். இவருடைய மகன் ராபின்சன் என்ற ராபின் (வயது 24), தூத்துக்குடி அழகேசபுரத்தைச் சேர்ந்த கணேசன் மகன் கன்னபெருமாள் (22) ஆகிய 2 பேரையும் ஒரு கொலை முயற்சி வழக்கில் தென்பாகம் போலீசார் கைது செய்தனர். இதே போன்று கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்த பாண்டியன் மகன் மகேஷ்குமார் என்ற சுள்ளான் (39) என்பவரை ஒரு கொலை முயற்சி வழக்கில் கோவில்பட்டி மேற்கு போலீசார் கைது செய்தனர். முத்தையாபுரம் ஜெ.எஸ்.தெருவை சேர்ந்த மாரியம்மாள் (49), மணிகண்டன் (22) ஆகியோரை திருச்செந்தூர் போலீசார் ஒரு வழக்கில் கைது செய்தனர்.

குண்டர் சட்டம்

இவர்கள் 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ராபின்சன் என்ற ராபின், கன்னபெருமாள், மகேஷ்குமார் என்ற சுள்ளான், மாரியம்மாள், மணிகண்டன் ஆகிய 5 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்