பெண்ணாடம் அருகே கங்கை மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

பெண்ணாடம் அருகே கங்கை மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடுபோனது.

Update: 2023-05-26 18:45 GMT

பெண்ணாடம், 

பெண்ணாடம் அடுத்த செம்பேரி கிராமத்தில் கங்கை மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும் கோவில் தர்மகர்த்தா ரெங்கநாதன்(வயது 70) கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று காலையில் கோவிலை திறக்க சென்றார். அப்போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்ற போது உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த காணிக்கை பணத்தை காணவில்லை. மேலும் கோவிலில் இருந்த 2 ஆம்ளிபயர்கள், ஹார்டு டிஸ்குகள் ஆகியவற்றையும் காணவில்லை. நள்ளிரவில் கேட்டின் முன்பக்க கதவு பூட்டை உடைத்த மர்மநபர்கள், கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச்சென்றுள்ளனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்