ஆற்றில் கரையாமல் கிடக்கும் விநாயகர் சிலைகள்

கும்பகோணத்தில் ஆற்றில் விநாயகா் சிலைகள் கரையாமல் கிடக்கின்றன.

Update: 2023-09-23 21:12 GMT

கும்பகோணம்;

கும்பகோணத்தில் ஆற்றில் விநாயகா் சிலைகள் கரையாமல் கிடக்கின்றன.

விநாயகர் சதுர்த்தி

கும்பகோணத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நகரின் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இரவு காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.கும்பகோணம் பகுதியில் 87 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பின்னர் விநாயகர் சதுர்த்தி நாளிலேயே 40 விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.நேற்று மாலை கும்பகோணம் மகாமகக்குளம் பகுதியில் இருந்து பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 47 விநாயகர் சிலைகள் கடந்த 20-ந் தேதி மாலை 5 மணிக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க, கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் ஊர்வலமாக புறப்பட்டு காவிரி ஆற்றின் பகவத் படித்துறைக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.

கரையாமல் கிடக்கிறது

இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி இரவு கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகளில் பெரும்பாலான சிலைகள் பாதி கரைந்தும், பாதி கரையாமலும் அப்படியே தண்ணீரில் கிடக்கின்றன. சில சிலைகள் தண்ணீருக்குள் மூழ்கி கிடக்கின்றன. 2 நாட்களுக்கும் மேலாக பாலக்கரை பகுதியில் விநாயகர் சிலைகள் கரையாமல் கிடந்ததால் ஆற்றில் குளிக்க வந்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவதுகளிமண், காகித கூழ் கொண்டு தயார் செய்த விநாயகர் சிலைகள் உடனே கரைந்து விடும். ஆனால் சிலைகள் கரைக்க ஆற்றி இறக்கப்பட்ட பின்னரும் தண்ணீர் மூழ்கி கிடக்கிறதே தவிர பாதி கரைந்தும், கரையாமலும் உள்ளது. விநாயகர் சிலைகள் கரையாமல் உள்ளதால் ரசாயனங்கள் ஏதும் பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்