சமூக நல்லிணக்க மேடை சார்பில் காந்தியடிகள் நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது.
காந்தியடிகள் நினைவு நாள்
சமூக நல்லிணக்க மேடை சார்பில் காந்தியடிகள் நினைவு நாள் தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று கடைபிடிக்கப்பட்டது. தர்மபுரியில் சமூக நல்லிணக்க மேடை சார்பில் காந்தியடிகள் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் பொ.மு.நந்தன் தலைமை தாங்கி காந்தியடிகள் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சுபேதார், மாநில பிரச்சார செயலாளர் சாதிக் பாஷா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சிசுபாலன், கிரைசாமேரி, கந்தசாமி, மாதர் சங்கம் சார்பில் நிர்மலா ராணி, ராஜாமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட துணைத் தலைவர் சிராஜுதீன், நிர்வாகி நிஜாமுதீன், தேசிய லீக் மாவட்ட தலைவர் சிக்கந்தர் மற்றும் கிறிஸ்தவ அமைப்பு நிர்வாகிகள் கலந்துகொண்டு மதவெறிக்கு எதிராகவும், தீண்டாமைக்கு எதிராகவும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
அரூர் - பாப்பிரெட்டிப்பட்டி
இதேபோன்று அரூரில் சமூக நல்லிணக்க மேடை சார்பில் நடந்த காந்தியடிகள் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கி காந்தியடிகள் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொகுதி துணை செயலாளர் கேசவன், மாவட்ட துணை செயலாளர் செல்லை சக்தி, ஒன்றிய செயலாளர் மூவேந்தன், த.மு.மு.க. நிர்வாகி நியாஸ், பங்குத்தந்தை ஜேம்ஸ் ஆண்டனி, மகளிர் குழு நிர்வாகி சாலா, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் குமார், முருகன், கவிஞர் நவகவி, பாரதிதாசன், தங்கதுரை, ராஜா, அல்லி முத்து, செங்கொடி உள்பட பலர் கலந்து கொண்டு தீண்டாமைக்கு எதிராகவும், மதவெறிக்கு எதிராகவும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இதேபோன்று பாப்பிரெட்டிப்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் காந்தியடிகள் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் இலியாஸ், பாபு அஸ்லம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் பழனி, நிர்வாகி மாயக்கண்ணன், சமூக நல்லிணக்க மேடை ஒருங்கிணைப்பாளர் அம்புரோஸ், நிர்வாகி சாமிக்கண்ணு, மார்க்சிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் தனுஷன்,
மாவட்டக்குழு உறுப்பினர் வஞ்சி, நிர்வாகிகள் சேகர், தீர்த்தகிரி, சொக்கலிங்கம், பொன்னுசாமி, மாதர் சங்கம் சார்பில் கண்ணகி, கிருஷ்ணவேணி, வாலிபர் சங்கம் சார்பில் கண்ணன், குப்பன், காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தீண்டாமை மற்றும் மதவெறிக்கு எதிராக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.