காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம்
சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
முகவர்கள் சங்கம்
சேலம் மாவட்ட அஞ்சலக சிறுசேமிப்பு முகவர்கள் சங்கம் சார்பில் அஸ்தம்பட்டி அஞ்சலக வளாகத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் அஞ்சலக சிறுசேமிப்பு முகவர்கள் சங்க மாவட்ட தலைவர் கே.எஸ்.கோவிந்தசாமி தலைமை தாங்கினார். சேலம் அஞ்சலகங்களின் கிழக்கு கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அருணாசலம் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அஸ்தம்பட்டி தபால் அதிகாரி ராபின்சன், சிறு சேமிப்பு முகவர்கள் சங்கச் செயலாளர் வேலுமணி, பொருளாளர் முரளிகண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கெங்கவல்லி
கெங்கவல்லியில் காந்தி ஜெயந்தி, காமராஜர் நினைவு தினத்தையொட்டி அவர்களது உருவப்படத்துக்கு நகர காங்கிரஸ் தலைவர் சிவாஜி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முகமது ஷரீப், சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காமராஜர் அறப்பணி மன்றம் சார்பாக மன்ற செயலாளர் முருகானந்தம் தலைமையில் செந்தில்குமார், தேவதாஸ், ராமலிங்கம், குருசாமி ஆகியோர் முன்னிலையில் காமராஜர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஓமலூர்
ஓமலூர் பஸ் நிலையம் அருகில் காடையாம்பட்டி கிழக்கு ஒன்றிய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடந்த காந்தி ஜெயந்தி விழாவுக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கி காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். ஓமலூர் ஒன்றிய தலைவர் பெருமாள், காடையாம்பட்டி கிழக்கு ஒன்றிய மகளிர் அணி ஜெயலட்சுமி, ஓமலூர் ஒன்றிய மகளிர் அணி காவியா, ராதா, அம்பிகா, மகேஸ்வரி, காடையாம்பட்டி கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப தலைவர் அருண்குமார், ஓமலூர் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப தலைவர் நிர்மல், காடையாம்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ், காடையாம்பட்டி ஒன்றிய மாணவரணி தலைவர் நவீன், காடையாம்பட்டி கிழக்கு தொண்டரணி செயலாளர் மாதையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
த.மா.கா.
ஓமலூர் பஸ் நிலையம் காந்தி சிலை அருகில் மேற்கு மாவட்ட த.மா.கா. சார்பில் காந்தி பிறந்த நாள் விழாவுக்கு வட்டார தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். சேலம் மேற்கு மாவட்ட த.மா.கா. தலைவர் சுசீந்திரகுமார் தலைமை தாங்கி காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தீண்டாமை ஒழிப்பு, மத நல்லிணக்கம், தீவிரவாத ஒழிப்பு, தேசிய ஒருமைப்பாடு, அனைவருக்கும் கல்வி போன்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் பஸ் நிலையத்தில் காமராஜர் சிலைக்கு நகர தலைவர் மணிகண்டன் முன்னிலையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி, அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் வட்டார தலைவர்கள் சேதுராமன், அபிமன்னன், நிர்வாகிகள் ராஜேந்திரன், தருமன், பாபு, இளைஞரணி நிர்வாகிகள் பாக்கியராஜ், பிரசாத், சரவணன், மனோஜ், விஜய் உள்பட பலர் கலந்து கொண்டனர். இளைஞர் அணி மாநில பொதுச் செயலாளர் ரகுநந்தகுமார் நன்றி கூறினார்.
தலைவாசல்
தலைவாசல் ஒன்றிய அலுவலகத்தில் காந்தி உருவப்படத்திற்கு நல்லதம்பி எம்.எல்.ஏ., தலைவாசல் ஒன்றியக்குழு தலைவர் ராமசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தலைவாசல் ஒன்றிய ஆணையாளர் துரைசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ, ஒன்றிய குழு உறுப்பினர்கள் மெய்யன், சின்னதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.