தென்னிந்திய அளவிலான கால்பந்து போட்டி

தென்னிந்திய அளவிலான கால்பந்து போட்டி நடந்தது.;

Update:2022-08-29 23:19 IST

இளையான்குடி, 

இளையான்குடியில் தென்னிந்திய அளவிலான கால்பந்து போட்டி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் நடைபெற்றது. இதில் 20 அணிகள் கலந்துகொண்டன. கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அப்துல் அஹது, செயலாளர் ஜபருல்லாஹ் கான், உறுப்பி னர்கள் சிராஜுதீன், அபூபக்கர் சித்திக், கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி, கல்வியியல் கல்லூரி முதல்வர் முகமது முஸ்தபா, சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் சபினுல்லாகான், ஸ்டார் முஸ்லிம் கால்பந்து குழு தலைவர் முகமது அலி, செயலாளர் அப்துல் ரசாக் மற்றும் நிர்வாகிகள் தலைமையில் போட்டிகள் தொடங்கின. இரண்டாம் நாள் போட்டிகளை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்தார். இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி அணி, கேரளா திருச்சூர் மார்டினிசிஸ் கல்லூரி அணி, ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி அணி மற்றும் கோயம்புத்தூர் ரத்தினம் கல்லூரி அணிகள் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வி துறையுடன் இணைந்து இளையான்குடி ஸ்டார் முஸ்லிம் கால்பந்து குழுவினர் செய்திருந்தனர். போட்டிகளை கால்பந்து ரசிகர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள்மற்றும் உள்ளூர் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்