யானைக்கு கஜபூஜை

அமிர்தகடேஸ்வரர் கோவிலில், யானைக்கு கஜபூஜை நடந்தது

Update: 2022-08-12 17:22 GMT

திருக்கடையூரில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மணிவிழா, சதாபிஷேகம், ஆயுள்ஹோமம் மற்றும் திருமணங்கள் நடந்து வருகின்றன. இதன்காரணமாக இந்தக் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்தநிலையில், நேற்று யானைகள் தினத்தையொட்டி தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கோவிலில் உள்ள அபிராமி என்ற யானைக்கு கஜ பூஜை செய்தார். பின்னர், யானைக்கு இனிப்பு, பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை வழங்கினார். தொடர்ந்து ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி விநாயகர், அமிர்தகடேஸ்வரர், காளசம்ஹாரமூர்த்தி, அபிராமி அம்மன் ஆகிய சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தார். பின்னர் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். அப்போது மயிலம் பொம்மபுர ஆதீனம் குருமகாசன்னிதானம் உள்பட பலர் உடன் இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.





Tags:    

மேலும் செய்திகள்