சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்

காரைக்குடி மற்றும் கல்லல் பகுதியில் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகளை பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர்.

Update: 2022-06-06 18:39 GMT

காரைக்குடி, 

காரைக்குடி மற்றும் கல்லல் பகுதியில் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகளை பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர்.

மாட்டு வண்டி பந்தயம்

காரைக்குடி அருகே மானகிரி தளக்காவூர் உசுலாவடிகருப்பர், நாச்சியம்மத்தாள் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் தளக்காவூர்-கல்லல் சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 23 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 8 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை கோட்டணத்தம்பட்டி ரவி வண்டியும், 2-வது பரிசை பரளி செல்வி வண்டியும், 3-வது பரிசை சிவகங்கை அருண் ஸ்டூடியோ வண்டியும் பெற்றன.

பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை கம்பம் பெரியகருப்பர் வண்டியும், 2-வது பரிசை ஏரியூர் பெத்தாச்சி அம்பலம் மற்றும் நல்லாங்குடி சசிகுமார் வண்டியும், 3-வது பரிசை நெடோடை மைனர் மார்த்தாண்டன் மற்றும் உஞ்சனை காசி வண்டியும் பெற்றன.

கல்லல் பந்தயம்

இதேபோல் கல்லல் அருகே வெற்றியூர் மருதூடைய அய்யனார், அன்னபூரணி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் வெற்றியூர்-கல்லல் சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 31 வண்டிகள் கலந்து கொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், நடுமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என 3 பிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 8 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை வெற்றியூர் அருண் வண்டியும், 2-வது பரிசை தேவகோட்டை பிரசாத் மற்றும் மேலூர் அஜ்மல்கான் வண்டியும், 3-வது பரிசை சின்ன ஓவிலாபுரம் பரமசிவம் வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற நடுமாட்டு வண்டிபந்தயத்தில் 10 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை வெற்றியூர் அருண் வண்டியும், 2-வது பரிசை நாட்டணி சூர்யா வண்டியும், 3-வது பரிசை வெற்றியூர் உமாதேவன் சுப்பு வண்டியும் பெற்றது. இறுதியாக நடைபெற்ற சின்னமாட்டு வண்டிபந்தயத்தில் 13 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை சின்னஓவிலாபுரம் பங்கலாமணி வண்டியும், 2-வது பரிசை வானக்கருப்பு செல்வேந்திரன் வண்டியும், 3-வது பரிசை சாத்தமங்கலம் பவித்ரா வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கும், சாரதிக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்