விஜயதசமியையொட்டி அம்பு விடும் நிகழ்ச்சி
விஜயதசமியையொட்டி முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் அம்புவிடும் நிகழ்ச்சி நடந்தது.
சிங்கம்புணரி,
விஜயதசமியையொட்டி முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் அம்புவிடும் நிகழ்ச்சி நடந்தது.
நவராத்திரி
சிங்கம்புணரி அருகே முறையூரில் அமைந்துள்ள மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் சாமிக்கு அன்னபூரணி, பிட்டுக்கு மண் சுமந்த லீலை, மகிசாசுரமர்த்தினி உள்ளிட்ட பல்வேறு அலங் காரங்கள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று மகா தீபாராதனை நடந்தது.
விழாவில் நேற்று விஜயதசமியையொட்டி மீனாட்சி சொக்கநாதர் பல வண்ண மலர் அலங்காரத்தில், குதிரை வாகனத்தில் ஏறி முறையூரை சுற்றியுள்ள 4 ரத வீதிகள் வழியாக வலம் வந்து அம்பு விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மகிசாசூரமர்த்தினி சூரனை வதம் செய்யும் விதமாக சுரேஷ் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் ஒன்றிணைந்து ஐந்து அம்புகளை எய்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஏற்பாடு
சிவாச்சாரியார் குதிரை வாகனத்தில் ஏறி நான்கு திசைகளிலும் அம்புகள் எய்தனர். அப்போது போட்டி போட்டு அம்புகளை கிராம மக்கள் சேகரித்தனர். ஏற்பாடு களை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் மற்றும் முறையூர் கிராமத்தினர் செய்திருந்தனர்.