கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்துவெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதியாகும் பப்பாளி

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு பப்பாளி ஏற்றுமதியாகிறது.

Update: 2023-02-26 18:45 GMT

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான உப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இங்கு முல்லைப்பெரியாறு பாசனம் மூலம் நெல், கரும்பு, வாழை மற்றும் காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் பப்பாளி சாகுபடியிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவை தற்போது மரங்களில் காய்த்து தொங்குகின்றன. பப்பாளி கன்றுகள் நடவு செய்த நாளில் இருந்து 7 மாதங்களுக்குள் விளைச்சல் அடைந்துவிடுகிறது. 2 வாரத்திற்கு ஒருமுறை காய்கள் பறித்து விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. ஒரு வருடத்திற்கு பப்பாளி மரங்கள் மூலம் மகசூல் கிடைக்கும். கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் விளைச்சல் அடையும் பப்பாளிகள் வெளிமாநிலங்களுக்கு அதிக அளவில் ஏற்றுமதியாகிறது. பப்பாளிகளை மருந்து தயாரிப்பதற்கும், சாப்பிடுவதற்கும் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். இதனால் பப்பாளி சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்