ஆதிவாசி மக்களுக்கு இலவச தார்ப்பாய்கள்

ஆதிவாசி மக்களுக்கு இலவச தார்ப்பாய்கள்

Update: 2022-08-13 12:40 GMT

பந்தலூர்

பந்தலூர் அருகே நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட 10-ம் நெம்பர் ஆதிவாசி காலனி உள்ளது. இங்கு வீடுகளின் மேற்கூரை பழுதடைந்து காண்பபடுகிறது. இதன் காரணமாக தற்போது பெய்து வரும் மழையால், வீடுகளுக்குள் தண்ணீர் ஒழுகுகிறது. இதனால் ஆதிவாசி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பந்தலூர் வருவாய்த்துறை சார்பில் ஆதிவாசி மக்களின் வீடுகளின் மேற்கூரையை மூட இலவச தார்ப்பாய்கள் வழங்கப்பட்டது. இதனை தாசில்தார் நடேசன் வழங்கினார். நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் தேவராஜ், கிராம நிர்வாக அலுவலர் கர்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்