குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகம், சீருடைகள்

குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகம், சீருடைகளை ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

Update: 2023-06-15 19:11 GMT

திமிரி அருகே உள்ள காவனூர் இந்திரா நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளியில் கடந்த 37 ஆண்டுகளாக தாய், தந்தையற்ற குழந்தைகளை பள்ளி நிர்வாகி ஆர்.சேட்டு இலவசமாக படிக்க வைத்து வருகிறார்.

தாயை இழந்த யு.கே.ஜி. மாணவன் ஆர்.சந்தோஷ், தந்தையை இழந்த 2-ம் வகுப்பு மாணவி பி.ஷாலினி, 4-ம் வகுப்பு படிக்கும் மாணவி பி.நந்தினி ஆகியோருக்கு இந்த ஆண்டு முழுவதும் தேவையான புத்தகம், நோட்டு, சீருடைகள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. வழங்கி நன்றாக படிக்கும்படி பாராட்டினார்.

நிகழ்ச்சிக்கு பள்ளி நிர்வாகி ஆர்.சேட்டு தலைமை தாங்கினார். பள்ளி கணக்காளர் கே.லட்சுமி, காவனூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.ரஞ்சித்குமார், வரகூர் பட்டணம் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா தினகரன், சாம்பசிவபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜி.சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் எம்.கோபி வரவேற்றார்.

நிகழ்ச்சியில் திமிரி ஒன்றியக் குழு துணைத் தலைவர் ஜெ.ரமேஷ், ஊராட்சி மன்ற உறுப்பினர் பி.பொன்னரசன், ஊர் பிரமுகர்கள் பி.வடமலை, கன்னடிபாளையம் எஸ்.ஆறுமுகம், பி.மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கடந்த 37 ஆண்டுகளாக தாய், தந்தையற்ற குழந்தைகளை எந்தவித கட்டணமும் இன்றி இலவசமாக படிக்க வைத்து வரும் பள்ளி நிர்வாகி ஆர்.சேட்டுவின் சேவைகளை பாராட்டி எம்.எல்.ஏ. சால்வை அணிவித்தார். முடிவில் பள்ளி கணினி ஆசிரியர் எம்.சுரேஷ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்