அம்பை:
அம்பை நகராட்சி ஊர்க்காடு தெற்கு காலனி பகுதியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. நகராட்சி தலைவர் கே.கே.சி.பிரபாகர பாண்டியன் தொடங்கி வைத்தார். நகராட்சி கவுன்சிலர் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம், மக்களை தேடி மருத்துவம் மூலம் நடமாடும் இலவச டிஜிட்டல் நெஞ்சக எக்ஸ்ரே வாகனம் மூலம் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பொதுமக்களுக்கு சர்க்கரை அளவு, ரத்த கொதிப்பு போன்றவை இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. காசநோய் கண்டறியப்படும் நோயாளிகளுக்கு உரிய உயர் சிகிச்சை அளிக்க வழிவகை செய்யப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் ஏராளமானவர் கலந்து கொண்டனர். முடிவில், சுகாதார ஆய்வாளர் திருப்பதி நன்றி கூறினார்.