இலவச மருத்துவ முகாம்

முதுகுளத்தூரில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2022-09-24 18:45 GMT

முதுகுளத்தூர்,

தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் கீழத்தூவல் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் முதுகுளத்தூர் பள்ளி வாசல் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு பேரூராட்சி தலைவர் ஷாஜகான் தலைமை தாங்கினார். கீழத்தூவல் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவர் நெப்போலியன், டாக்டர்கள் திவான் மகேசன், விக்னேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கர்ப்பிணிகளுக்கான சிகிச்சை, தடுப்பூசி சேவைகள் வழங்கப்பட்டது. இதில் முதுகுளத்தூரை சுற்றியுள்ள கிராம பகுதியில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு இலவசமாக சிகிச்சை பெற்றனர். இதில் சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் நேதாஜி உள்பட செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்