காரைக்குடி,
காரைக்குடி சிட்டி அரிமா சங்கம் மற்றும் லியோ கிளப் ஆப் காரைக்குடி சிட்டி, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சார்பில் இயற்கை மருத்துவம் மற்றும் அக்குபஞ்சர் சிகிச்சை முகாம் காரைக்குடி பதினெண்சித்தர் பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு காரைக்குடி அரசு மருத்துவமனை டாக்டர் பெல் வின் மற்றும் குழுவினர் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர். முகாம் ஏற்பாடுகளை சங்கத்தின் தலைவர் சண்முகசுந்தரம், செயலர் பழனிவேல், பொருளாளர் லட்சுமணன் செய்திருந்தார்கள். விழாவில் லயன்ஸ் மாவட்ட முன்னாள் கவர்னர் ஜானகிராமன், வட்டார தலைவர் முத்து கண்ணன், மண்டல தலைவர் முத்துக்குமார், நிர்வாகிகள் அண்ணாமலை, ரவிக்குமார், முன்னாள் மாவட்ட அமைச்சரவை செயலாளர் பாதம் பிரியான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.