இலவச இருதய பரிசோதனை முகாம்

சிறுவர்களுக்கான இலவச இருதய பரிசோதனை முகாம் நடந்தது

Update: 2022-09-25 18:45 GMT

செங்கோட்டை:

செங்கோட்டை அரசு பொது நூலகத்தில் வைத்து ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் சாரல், ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் சக்தி மற்றும் சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை இணைந்து சிறுவர்-சிறுமிகளுக்கான இலவச இதய பரிசோதனை முகாம் நடைபெற்றது.

16 வயது வரை உள்ள சிறுவர்-சிறுமிகளுக்கான இந்த முகாமில் செங்கோட்டை, தென்காசி, புளியரை, பண்பொழி, கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான சிறுவர்கள் தங்களது பெற்றோருடன் வந்திருந்து முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர். சென்னை அப்போலோ குழந்தைகள் நல மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர். இருதய சிறப்பு மருத்துவர்கள் எக்கோ, கார்டியாக் டாப்ளர் ஸ்கேன், இ.சி.ஜி. மற்றும் முழு உடல் பரிசோதனை செய்தனர். முகாமில் மருந்துகளும் கொடுக்கப்பட்டது. இருதய அறுவை சிகிச்சை தேவை என கண்டறியப்பட்ட குழந்தைகளுக்கு சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையில் முதல்-அமைச்சரின் காப்பீடு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்ய ஆலோசனைகளும் வழங்கப்பட்டு, மேல்சிகிச்சைக்கான வழிமுறைகளும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாரிமுத்து வரவேற்புரை வழங்கினார். நெல்லை நாயகம், ராஜகோபாலன், ஷேக்சலீம், திட்ட தலைவர் ஷாஜகான், துணை ஆளுநர் அனுஜா, திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வகணபதி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

முகாம் ஏற்பாடுகளை ரோட்டரி கிளப் தலைவர்கள் மாரிமுத்து, கவிதா முத்தையா மற்றும் செயலாளர்கள் ரமேஷ், அழகரசி ராஜா ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் அழகரசி ராஜா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்