மேல்மருவத்தூரில் 675 பேருக்கு இலவச கண் கண்ணாடி

இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் அறுவை சிகிச்சை முகாமை ஆன்மிக குரு பங்காரு அடிகளார் தொடங்கி வைத்தார். அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி ஆஸ்பத்திரி அரங்கில் நடைபெற்றது.

Update: 2023-05-01 07:54 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 83-வது பிறந்த நாளையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் அறுவை சிகிச்சை முகாமை கடந்த 27-ந்தேதி அன்று ஆன்மிக குரு பங்காரு அடிகளார் தொடங்கி வைத்தார். இதில் 750-க்கும் மேற்பட்டோர் கண் பரிசோதனை செய்து கொண்டனர். கண்பார்வை குறைபாடு உள்ள 675 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் கண் அறுவை சிகிச்சை கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. இந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி ஆஸ்பத்திரி அரங்கில் நேற்று காலை நடைபெற்றது.

இதற்கு ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமை தாங்கினார். சென்னை சங்கரா நேத்ராலயா கண் ஆஸ்பத்திரியின் இயக்குனர் மீனா பாஸ்கர், முன்னிலை வகித்தார். ஆதிபராசக்தி ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் ரமேஷ் அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், ஆன்மிக குரு பங்காரு அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு கண் கண்ணாடிகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அகத்தியன், டாக்டர் பிரசன்னா வெங்கடேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியாக ஆதிபராசக்தி கண் ஆஸ்பத்திரியின் தலைமை டாக்டர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்