"விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 1,000 யூனிட்டாக உயர்வு" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரத்தை 1,000 யூனிட்டாக உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-03-03 13:58 GMT

சென்னை,

விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரத்தை 700 யூனிட்டாக இருந்த நிலையில் 1,000 யூனிட்டாக உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கைத்தறி, விசைத்தறி உற்பத்தியாளர்களுக்கு மின் கட்டண சலுகை மார்ச் 1 முதல் அமலாகி உள்ளது என முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மாநிலத்தில், விசைத்தறிக்கு 3 நிலையிலான மின்கட்டணம் ஒரே நிலையாக மாற்றம் செய்து, ஒரு யூனிட்டுக்கு 70 பைசா மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 700 யூனிட்டாக இருந்த நிலையில், 1000 யூனிட்டாக உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதுபோன்று கைத்தறி நெசவுக்கு 200 யூனிட் இலவசம் என்பது 300 யூனிட்டாக உயர்த்தியும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஈரோடு இடைத்தேர்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 1-ந்தேதி முன் தேதியிட்டு அமல்படுத்தப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்