80 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

80 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

Update: 2023-08-01 19:03 GMT


விருதுநகர் அருகே சத்திரரெட்டியபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 80 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு விருதுநகர் யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர் தலைமை தாங்கினார். சத்திரரெட்டியபட்டி பஞ்சாயத்து தலைவர் மருதுராஜ் முன்னிலை வகித்தார். விழாவில் விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ-மாணவிகளுக்கு தரமான விலையில்லா சைக்கிள், உயர் கல்வி கற்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் உதவித்தொகை, கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை, மகளிருக்கான உரிமைத்தொகை என பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். ஆதலால் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட அனைவரும் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இவ்விழாவில் யூனியன் கவுன்சிலர் திவ்யா ராம்குமார், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரி, ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளின் பெற்றோர், கிராம மக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்