214 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
214 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
பொறையாறு
பொறையாறு தவசுமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார் தலைமை தாங்கினார். தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் சுகுணாசங்கரி குமரவேல் முன்னிலை வகித்தார். விழாவில் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 214 மாணவ -மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கி பேசினார். இதில் ஒன்றிய குழுத்தலைவர் நந்தினி ஸ்ரீதர், வார்டு உறுப்பினர் கவிதா, மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஞானவேலன் தி.மு.க.ஒன்றிய செயலாளர்கள் அப்துல் மாலிக், அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ.சித்திக் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதேபோல் பொறையாறு அருகே தில்லையாடி தியாகி வள்ளியம்மை நினைவு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் ரெங்கராஜன் தலைமையில் நடந்த விழாவில் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினார். அதை தொடர்ந்து சங்கரன்பந்தல் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நிவேதா முருகன் எம்.எல்.ஏ. விலையில்லா சைக்கிள் வழங்கி பேசினார். விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் லெனின் மேஷாக், பெற்றோர் ஆசிரியர் கழக இணை செயலாளர் கருணாநிதி உள்ளிட்ட ஆசியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் வீரமணி நன்றி கூறினார்.