இலவச தேனீ வளர்ப்பு பயிற்சி

நாகையில் இலவச தேனீ வளர்ப்பு பயிற்சி 10 நாட்கள் நடக்கிறது,

Update: 2023-05-22 18:45 GMT

நாகை மாவட்ட ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் நடராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-நாகை புதிய கடற்கரை சாலையில் இயங்கி வரும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் இலவச தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம் வருகிற 25-ந்தேதி(வியாழக்கிழமை)தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. இ்ந்த பயிற்சி முகாம் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. பயிற்சிக்கான உபகரணங்கள், மதிய உணவு, தேனீர் உள்ளிட்டவை வழங்கப்படும். 18 வயது முதல் 45 வயது உள்ள நாகை மாவட்ட கிராமப்புறங்களை சேர்ந்த இரு பாலரும் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். குறைந்தபட்ச கல்வி தகுதி 8-ம் வகுப்பு ஆகும். பயிற்சியில் சேர விரும்புபவர்கள் பயிற்சி நிறுவனத்தில் நேரிலோ அல்லது 8870940443 என்கிற ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய செல்போன் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்