வியாபாரியிடம் ரூ.12¾ லட்சம் மோசடி
கோவையில் வெல்லம் வாங்கி வியாபாரியிடம் ரூ.12¾ லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
குனியமுத்தூர்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியை சேர்ந்தவர் தனசேகர் (வயது 36). இவர் நாட்டு சர்க்கரை மற்றும் வெல்லம் வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் கோவை குனியமுத்தூரை அடுத்த பி.கே.புதூர் பகுதியை சேர்ந்த ஜெயிலாபுதீன் என்பவர் கடந்த ஆண்டு முதல் தற்போது வரை ரூ.12 லட்சத்து 80 ஆயிரத்திற்கு வெல்லம் மற்றும் நாட்டுச்சர்க்கரை வாங்கியதாக தெரிகிறது.
இதற்கான பணத்தை அவர், தனசேகரிடம் வழங்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தனசேகர் கோவை வந்து ஜெயிலாபுதீனை சந்திக்க முயன்றார். ஆனால் அவர் வீட்டில் இல்லை. மேலும் அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் என்று வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தனசேகர் கோவை குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.