நகைப்பட்டறை அதிபரிடம் ரூ.9 லட்சம் மோசடி
நகைப்பட்டறை அதிபரிடம் ரூ.9 லட்சம் மோசடி செய்யப்பட்டது
கோவை
கோைவ கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 43), நகைப்பட்டறை அதிபர். இவரிடம் இருந்து கோவையை சேர்ந்த தனியார் நிதி நிறுவன மேலாளர் சத்யநாதன் (53) கடந்த 2016-ம் ஆண்டு பல்வேறு தவணையாக ரூ.16 லட்சம் கடன் வாங்கினார். பின்னர் ரூ.6 லட்சத்துக்கு காசோலை கொடுத்தார்.
அத்துடன் ரூ.1 லட்சத்தை வெங்கடேஷ் வங்கி கணக்கிலும் செலுத்தினார். மீதமுள்ள ரூ.9 லட்சத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்து உள்ளார்.
இதைத்தொடர்ந்து வெங்கடேஷ், சத்யநாதனை பலமுறை செல்போனிலும், நேரிலும் சந்தித்து கேட்ட போது மீதமுள்ள பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. இது குறித்த புகாரின்பேரில் கடைவீதி போலீசார் சத்யநாதன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.