வாலிபரிடம் ரூ.2 லட்சம் மோசடி; அ.தி.மு.க. பிரமுகருக்கு வலைவீச்சு

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த அ.தி.மு.க. பிரமுகரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-09-30 18:45 GMT

வெளிப்பாளையம்:

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த அ.தி.மு.க. பிரமுகரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அ.தி.மு.க. பிரமுகர்

நாகை நம்பியார் நகரில் வசித்து வருபவர் கண்ணன்(வயது 52). இவர் அ.தி.மு.க. மீனவர் இளைஞரணி செயலாளராக இருந்து வருகிறார்.

மேலும் இவர், அ.தி.மு.க. ஆட்சியின்போது தமிழ்நாடு மீன்வள நலவாரிய தலைவராகவும் இருந்து வந்தார்.

ரூ.2 லட்சம் கொடுத்தார்

நாகை வெளிப்பாளையம் தர்மகோவில் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் வசந்தகுமார்(35). கடந்த 2016-ம் ஆண்டு நாகை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் காவலாளி வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கு ரூ.2 லட்சம் தர வேண்டும் என்றும் வசந்தகுமாரிடம், கண்ணன் கேட்டுள்ளார்.

இதை நம்பிய வசந்தகுமார், கண்ணனிடம் ரூ.2 லட்சம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட கண்ணன் வேலை வாங்கி தரவில்லை.

வலைவீச்சு

இதையடுத்து வசந்தகுமார் கடந்த மார்ச் மாதம் கண்ணனிடம், தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் வசந்தகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது

இதுகுறித்து வசந்தகுமார், வெளிப்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார், கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்