டிரைவரிடம் பணம் மோசடி; பெண் கைது

டிரைவரிடம் பணம் மோசடி; பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-05 19:57 GMT

பாளையங்கோட்டை தியாகராஜநகரை சோ்ந்தவர் சங்கர் மகன் சிதம்பரம் (வயது 34). டிரைவர். இவர் நெல்லை சந்திப்பில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்சி நடத்தி வரும் ஸ்டெல்லா (50) என்பவரிடம் தனக்கு வேலை வாங்கி தருமாறு கூறினார். இதனை நம்பி அவரிடம் சிதம்பரம் ரூ.2 லட்சத்து 23 ஆயிரம் கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவருக்கு ஓமன் நாட்டில் வேலை கிடைத்தது. ஆனால் ஸ்டெல்லா, அவரை பணிசெய்வதற்கான விசாவில் அனுப்பி வைக்காமல் சுற்றுலா செல்வதற்கான டூரிஸ்ட் விசாவில் வெளிநாடுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு வேலை செய்ய முடியாமல் ஊருக்கு திரும்பிய சிதம்பரம், இதுகுறித்து ஸ்டெல்லாவிடம் கேட்டார். அப்போது ஸ்டெல்லா அவரிடம் தகராறு செய்து அவருக்கு மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து சிதம்பரம் நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஸ்டெல்லாவை கைது செய்தனர். இதற்கிடையே திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஸ்டெல்லா, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்