வட்டியில்லா கடன் தருவதாக முன் பணம் பெற்று மோசடி

வட்டியில்லா கடன் தருவதாக முன் பணம் பெற்று மோசடி செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-05-13 18:49 GMT

பெரம்பலூர்-எளம்பலூர் ரோடு, சாமியப்பா நகரை சேர்ந்த பெண்கள் மற்றும் மாவட்டத்தை சேர்ந்த பெண்களில் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில், ஒரு பெண் உள்ளிட்ட சிலர் ஒரு அறக்கட்டளை நடத்துவதாகவும், அதில் வட்டியில்லா கடன் வழங்குவதாகவும் கூறி, அதற்கு எங்களிடம் முன் பணமாக லட்சக்கணக்கில் பணம் பெற்றனர். ஆனால் கடனும் வழங்கவில்லை. கொடுத்த முன் பணத்தை திருப்பி தரவும் இல்லை. இது குறித்து அந்த பெண்ணிடம் நேரில் கேட்டபோது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததோடு, தற்போது தலைமறைவாகி விட்டார். அவரை கண்டுபிடித்து அவரிடம் இருந்து எங்களது முன் பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்