ரூ.20 லட்சம் செலவில் பல்நோக்கு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா
கடையம் அருகே ரூ.20 லட்சம் செலவில் பல்நோக்கு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது
கடையம்:
கடையம் பெரும்பத்து ஊராட்சி வெய்க்காலிப்பட்டி அருந்ததியர் காலனியில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு தொகுதி நிதியில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன்ஷீலா பரமசிவன் தலைமை தாங்கினார். மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் அணி மாநில அமைப்பு செயலாளர் ராதா, மாவட்ட செயலாளர் கணபதி, மாநில அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு செயலாளர் சேர்மதுரை, ஒன்றிய செயலாளர்கள் ராஜவேல், இளங்கோ, வார்டு உறுப்பினர்கள் ஜெயா மாரியப்பன், ரஞ்சிதா பிரபு, ராஜேஷ்வரி வேல்ராஜ், வேல்சாமி, லட்சுமி வினிஷ்டன், முருகன், ஒப்பந்தக்காரர் எம்.ஆர்.கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.