பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

வாசுதேவநல்லூரில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

Update: 2022-11-22 18:45 GMT

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் யூனியன் தலைவன்கோட்டை கிராமத்தில் உள்ள எஸ்.எம். நடுநிலைப்பள்ளி, டி.டி.டி.ஏ. தொடக்கப்பள்ளியில் தமிழ் வழி கல்வி பயிலும் மாணவ- மாணவிகளுக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்ட அனைத்து மறவர் நல கூட்டமைப்பு சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. கூட்டமைப்பு தென்காசி மாவட்ட செயலாளரும், தலைவன் கோட்டை கூட்டுறவு கடன் வங்கி தலைவரும், யூனியன் கவுன்சிலருமான எம்.விஜய பாண்டியன் தலைமை தாங்கி, 300 மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தலைவன்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சர்மிளா வேல்சாமி, எஸ்.எம்.நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை முருகலட்சுமி, டி.டி.டி.ஏ. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் எட்வின் சுந்தர் சிங் மற்றும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், அனைத்து மறவர் நல கூட்டமைப்பு நிர்வாகிகள் எஸ்.துரைப்பாண்டியன், பி.பூசைப்பாண்டியன், மு.நமச்சிவாயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்