பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூன் மாதம் முழு சம்பளம் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

தமிழ்நாட்டில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூன் மாதம் முழு சம்பளம் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-06-16 11:13 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 10 ஆண்டுகளுக்கு முன்பு, 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். தற்போது 12 ஆயிரம் பேர் பணியாற்ற வருகின்றனர். இவர்களுக்கு மாதம் 10,000 சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. வாரத்தில் மூன்று அரை நாட்கள் கட்டாயம் பணி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த கல்வி ஆண்டு கடந்த 13-ந் தேதி தொடங்கிய நிலையில், இந்த மாதத்தில் 2 வாரங்கள் மட்டுமே வேலை நாட்களாக உள்ள நிலையில், பகுதிநேர ஆசிரியர்களுக்கு முழு சம்பளம் இந்த மாதத்திற்கு வழங்கப்படுமா என கேள்விகள் எழுந்துள்ளது.

இந்நிலையில், பகுதிநேர ஆசிரியர்கள் அனைவருக்கும் ஜூன் மாதம் முழு சம்பளம் வழங்கலாம் எனபள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பகுதி நேர ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள் எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஜூன் மாதத்திற்கு அனைத்து பகுதிநேர ஆசிரியர்களுக்கும் முழு சம்பளம் வழங்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்