திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

Update: 2023-08-18 08:04 GMT

திருத்தணி,

திருத்தணி ஒன்றியத்தில் சத்துணவு ஊழியர்கள் நேற்று 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு பணியாளரை வைத்தே நிறைவேற்ற வேண்டும், 10 ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியரை அனைத்து துறையிலும் பணியமர்த்த வேண்டும். வரையறுக்கப்பட்ட ஊதியம், காலிப்பணியிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும், ஓய்வுபெற்றவர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் ரூ.7,650 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதேபோல் திருவாலங்காடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலுகம் முன்பு திரண்ட சத்துணவு ஊரியர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வழியுறுத்தி ரத்தத்தால் கையெழுத்திட்டு அந்த மனுக்களை பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வழங்கினார்கள்.

இதைபோல கும்மிடிப்பூண்டி, பூண்டி, எல்லாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள சத்துணவு ஊழியர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் முன்பு திரண்டு ரத்த கையெழுத்து இயக்கம் போராட்டம் நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்