ஓட்டப்பிடாரத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஓட்டப்பிடாரத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-10-13 18:45 GMT

ஓட்டப்பிடாரம்:

தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஓட்டப்பிடாரம் பஜாரில் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு, அங்கன்வாடியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு பென்ஷன் ரூ.6,750 வழங்க வேண்டும். அரசுத்துறையில் காலிப் பணியிடங்களில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களை ஈர்த்து முறையான கால முறை ஊதியம் வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்ட அமலாக்கத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓட்டப்பிடாரம் வட்டாரத் தலைவர் புஷ்பவல்லி தலைமை தாங்கினார். வட்டார நிர்வாகிகள் வள்ளியம்மாள், செல்வம், சோலையப்பன், கேசவம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழுஉறுப்பினர் பலவேசம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகவீர பாண்டிய கட்டபொம்மன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். வட்டார நிர்வாகி ஆண்டிச்சாமி நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு, அங்கன்வாடிகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்