சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பாவூர்சத்திரத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரத்தில் உள்ள கீழப்பாவூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு கீழப்பாவூர் ஒன்றிய சத்துணவு ஊழியர்கள் சங்க ஒன்றிய துணைத் தலைவர் தங்க மணி தலைமை தாங்கினார். சத்துணவு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் சோமசுந்தரம், ஜெயலட்சுமி, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் சிவசுப்பிரமணியன் கோரிக்கை விளக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் கங்காதரன் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார். சக்திமாரி நன்றி கூறினார்.
அரசு அறிவித்துள்ள காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை தனியாரிடம் கொடுப்பதை கைவிட வேண்டும், சத்துணவு பணியாளர்கள், சமையலர்கள் உள்பட அனைத்து காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.