சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஓட்டப்பிடாரத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியம்
ரூ.7,500 வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் கோகிலா தலைமை தாங்கினார். ஞானமணி கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட துணை தலைவர் பிரீமென், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் அன்பு செல்வன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜெயபாக்கியம், மாவட்டத் துணைத் தலைவர் பாத்திமா ராணி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் பொன்னரசி, வட்டாரப் பொருளாளர் ஆண்டாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.