சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வேலூரில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-07-15 17:44 GMT

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் வேலூர் மாவட்டம் சார்பில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் வில்வநாதன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் புவனேஸ்வரி, தமிழ்செல்வி, இணைச்செயலாளர் மரகதம், மாநில செயற்குழு உறுப்பினர் ருக்குமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், போர்க்கால அடிப்படையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும், மத்திய அரசு அறிவித்துள்ள அகவிலைப்படி 3 சதவீதம் இந்தாண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதில், சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் பெருமாள் நன்றி கூறினார்.

முன்னதாக சத்துணவு ஊழியர்கள் சத்துவாச்சாரி ஆவின் பால்பண்ணை அருகே இருந்து ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் வரை வந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்