அரசுப்பள்ளியில் உணவு திருவிழா

Update: 2022-12-19 14:23 GMT


சேவூர் அருகே மங்கரசுவலையபாளையம் தொடக்கப்பள்ளியில் 80 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் உணவுத்திருவிழா நடந்தது. உணவு திருவிழாவில். ராகி, கம்பு, வரகு, தினை, சாமை, சோளம் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட இனிப்புகள் மற்றும் காரவகைகள், உணவுப் பொருட்கள் அடங்கிய கண்காட்சியும், சிறுதானியங்கள், பருப்பு வகைகள், கீரை விதைகள், அரிசி ரகங்கள், எண்ணெய் வித்துக்கள் அடங்கிய விதைக்கண்காட்சியும் நடைபெற்றது. மாணவ, மாணவியர் மற்றும்பெற்றோர் ஆர்வத்துடன் கண்காட்சியை கண்டுகளித்தனர்.

பள்ளித்தலைமையாசிரியர் சூரியப்பிரகாஷ் சிறுதானியஉணவுகளின் பயன்களையும், மண்பானை முக்கியத்துவம் பற்றி விளக்கினார். விழாவினை பள்ளி ஆசிரியைகள் சிந்துவடிவுக்கரசி, கல்யாணி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

மேலும் செய்திகள்