முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சார்பில் உணவு திருவிழா

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சார்பில் உணவு திருவிழா நடைபெற்றது.

Update: 2023-02-08 18:45 GMT

முதுகுளத்தூர், 

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சார்பில் உணவு திருவிழா நடைபெற்றது. இந்த உணவு திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கள் வீடுகளில் தயாரித்த கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, சாமை, சோளம், பச்சை பயிறு உள்ளிட்ட சிறுதானிய உணவு பொருட்களை வைத்து பாரம்பரிய கழி, சுண்டல், கம்மஞ்சோறு, சிறுதானிய தோசை, முளைக்க வைக்கப்பட்ட பயறு வகைகள் உள்ளிட்ட தானியங்கள் கொண்ட உணவுகளையும், கேப்பை கூழ், கம்மங்கூழ் மற்றும் பழங்களுடன் சேர்த்து ஜூஸ்கள் தயாரித்து கலந்து கொண்டனர். முதுகுளத்தூரில் உள்ள அனைத்து பள்ளிகளில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த திருவிழாவில் பங்கேற்றனர். சிறுதானியங்களில் தயாரித்த உணவுகளை வந்த விருந்தினர்களுக்கு கொடுத்து மாணவர்கள் உபசரித்தனர். மேலும் விழாவில் கலந்து கொண்ட அதிகாரிகளும், விருந்தினர்களும் ஒரு தனியார் கேட்டரிங் கல்லூரிக்கு நிகராக அரசு பள்ளியில் உணவு திருவிழா நடந்ததை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இந்த உணவுகளை தயார் செய்து போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டுகளை தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்