மடிப்பாக்கம் தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் கைதான 9 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

மடிப்பாக்கம் தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் கைதான 9 பேர் மீது போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நடவடிக்கை குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

Update: 2022-06-05 07:08 GMT

சென்னையை அடுத்த மடிப்பாக்கத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் செல்வம் கடந்த பிப்ரவரி 1-ந்தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஜெயமுருகன் (வயது 42), உமா மகேஸ்வரன் (43), ரமேஷ் (39), சகாய டென்சி (55), செங்குன்றத்தை சேர்ந்த முத்துசரவணன் (31), கண்ணகிநகரை சேர்ந்த மணிகண்டன் (32), பெரியபாளையத்தை சேர்ந்த தணிகா (33), திரு.வி.க.நகர் பகுதியை சேர்ந்த கவுதமன் (45), கெருகம்பாக்கத்தை சேர்ந்த சதீஷ்குமார் (34) ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

இதே போன்று பாரிமுனையை சேர்ந்த கஞ்சா வியாபாரி முகமது நவுஷாத் அலி (35), திருவல்லிக்கேணி சரித்திர பதிவேடு குற்றவாளி பாலாஜி (26), நில மோசடி வழக்கில் சிக்கிய மோகனசுந்தர் (42), கஞ்சா விற்பனை செய்த வழக்கில் சிக்கிய வடமாநிலத்தை சேர்ந்த மாஷூக் மியா (24), ஜாகிர் உசேன் (23), அனோவர் உசேன் (24), கடன் மோசடி வழக்கில் கைதான மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் (54) ஆகிய 7 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார். இந்த ஆண்டில் இதுவரையில் 148 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்