பரமக்குடி வைகை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்

பரமக்குடி வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Update: 2022-08-30 18:25 GMT

பரமக்குடி,

வைகை அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக கடந்த 27-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தொடர்ந்து 5 நாட்கள் திறந்து விடப்படும் அந்த தண்ணீர்  பார்த்திபனூர் மதகு அணையை வந்தடைந்தது. அங்கிருந்து நேற்று காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீரை திறந்து விட்டனர். இதனால் 2300 கன அடி முதல் 2500 கன அடி வரை வைகை ஆற்றில் செல்கிறது. இதன்காரணமாக வைகை ஆறு முழுவதும் தண்ணீர் கரைபுரண்டு ராமநாதபுரம் பெரிய கண்மாய் நோக்கி ஓடுகிறது.

பாசனத்திற்கு செல்லும் தண்ணீரை தேவையின்றி யாரும் வெட்டி பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து செல்லக்கூடாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வைகை ஆற்றில் தேவையின்றி யாரும் இறங்கவும், நடந்து செல்லவும் வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். ஏற்கனவே கடந்த 7-ந் தேதி வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் வைகை ஆற்றை வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது வைகையில் கரை புரண்டு ஓடும் தண்ணீரை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கூட்டமாக வந்து வேடிக்கை பார்த்து செல்கின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்