மீன்பிடி தடைகாலம்- குமரி மீனவர்கள் கரை திரும்பினர்

மேற்கு கடல் பகுதியில் ஜூன் 1ம் தேதி முதல்மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வருகிறது.

Update: 2023-05-29 04:46 GMT

குமரி,

மேற்கு கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலத்தை ஒட்டி கன்னியாகுமரியில் விசைப்படகில் கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பினர். குளச்சல், முட்டம் ஆகிய துறைமுகங்களில் இருந்து சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்பினர்.

ஜூன் 1ம் தேதி முதல் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வருகிறது, இதனை முன்னிட்டு மீனவர்கள் கரை திரும்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எஞ்சிய விசைப்படகு மீனவர்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் மாலைக்கு கரை திரும்பவேண்டுமென அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்