மேலூர் அருகே மீன்பிடி திருவிழா

மேலூர் அருகே மீன்பிடி திருவிழா நடைபெற்றது

Update: 2023-06-20 00:52 GMT

மேலூர், 

மேலூர் அருகே புலிப்பட்டி கிராமத்தில் உள்ள பொண்ணு முனியாண்டி கோவில் ஆயிரம்குளத்து கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. பாரம்பரிய முறைப்படி கிராமத்தினர் வெள்ளைக்கொடி அசைத்து மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தனர். சுற்றுப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கச்சா, ஊத்தா, வலை உள்ளிட்ட மீன்பிடி வலைகளினால் போட்டி போட்டு மீன்களை பிடித்தனர். அதில் கெண்டை, விரால் உள்ளிட்ட நாட்டு வகை மீன்களை பொதுமக்கள் பிடித்து மகிழ்ச்சியுடன் சென்றனர். இது போன்ற மீன்பிடி திருவிழா நடத்துவதால் விவசாயம் செழிக்கும் என்பது பொதுமக்களின் நம்பிக்கையாகும். 

Tags:    

மேலும் செய்திகள்