மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
பலத்த சூறைக்காற்று எச்சரிக்கையால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
திசையன்விளை:
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புயல் உருவாகியுள்ளது. இதனால் பலத்த சூறைக்காற்று வீசும் என்பதால் மறு உத்தரவு வரும்வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என ராதாபுரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் மூலம் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்த தகவல் ஆலய ஒலிபெருக்கி மூலம் மீனவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனால் நெல்லை மாவட்டம் உவரி, கூட்டப்பனை, கூடுதாழை இடிந்தகரை, கூத்தன்குழி, பெருமணல், பஞ்சல், தோமையர்புரம், கூட்டப்புளி, ஜார்ஜ்நகர், மிக்கேல் நகர் மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. இதனால் ஏராளாமான மீன்பிடி படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் அதிகாலையில் உவரி, கூட்டப்பனை, கூடுதாழை கடற்கரை பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. அதன் காரணமாக கூட்டப்பனை கடற்கரையில் இருந்த மீன் வலைபின்னும் கொட்டகைகள் காற்றில் அடித்து செல்லப்பட்டது.