திமுக ஆட்சியில் மீனவ மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

திமுக ஆட்சியில் மீனவ மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Update: 2022-12-10 09:43 GMT

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்து மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவு மாமல்லபுரத்திற்கு அருகே கரையைக் கடந்தது. புயலின் போது பெய்த மழை மற்றும் காற்றின் காரணமாக சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகள் கடலில் மூழ்கி சேதமடைந்தன.

இந்த நிலையில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் புயல் பாதிப்பு குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், அவர் நிருபர்களை சந்தித்து கூறியதாவது,

திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று 19 மாதங்கள் கடந்த நிலையிலும் மீனவ மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். மேலும், மீனவர்களுக்கான மானிய டீசலை உயர்ததி வழங்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார். 

Tags:    

மேலும் செய்திகள்