தெப்பத்தில் மீன்கள் விடும் நிகழ்ச்சி

சிவகாசியில் தெப்பத்தில் மீன்கள் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-11-16 19:15 GMT

சிவகாசி, 

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பன்னீர் தெப்பம் உள்ளது. இந்த தெப்பத்தில் கழிவுநீர் கலந்து வந்த நிலையில் சிவகாசி முகநூல் நண்பர்கள் குழுவினர் இதனை சரி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சமூக ஆர்வலர்கள் பலரின் உதவியுடன் தற்போது தெப்பம் மீட்கப்பட்டு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு மழைநீர் மட்டும் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் மீன்கள் வளர்க்க வேண்டும் என்று முகநூல் நண்பர்கள் குழுவினர் முடிவு செய்து அதற்கான பணியினை அசோகன் எம்.எல்.ஏ. நேற்று தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக பன்னீர் தெப்பத்தில் 1,000 மீன் குஞ்சுகள் விடப்பட்டது. இந்தநிகழ்ச்சியில் தொழில்அதிபர் லவ்லி செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து அசோகன் எம்.எல்.ஏ. செங்குளம் கண்மாய் பகுதியில் சிவகாசி பசுமை மன்றம் சார்பில் நடைபெற்று வரும் கண்மாய் கரைகளை பலப்படுத்தும் பணியினை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.


Tags:    

மேலும் செய்திகள்