கோவையில் மீன் விலை உயர்வு

கோவையில் மீன் விலை உயர்ந்து.

Update: 2022-07-24 16:31 GMT

கோவை

கோவை உக்கடம் லாரிபேட்டை மொத்த மீன் மார்க்கெட், பெரியகுளம் அருகே செல்வபுரம் சாலையில் உள்ள சில்லரை மீன் மார்க்கெட்டுகளுக்கு ராமேசுவரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகள் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் கடல்மீன்கள் விற்பனைக்கு வருகின்றன. தற்போது கேரளாவில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இதன் காரணமாக மீன்வரத்து குறைந்ததால், கோவையில் கடல் மீன்களின் விலை உயர்ந்துள்ளது.

உக்கடம் பெரியகுளம் அருகே செல்வபுரம் சாலையில் உள்ள மாநகராட்சி மீன் விற்பனை மார்க்கெட்டில் நேற்று விற்பனையான மீன்விலை விவரம் (கிலோவில்) வருமாறு:- வஞ்சிரம் (பெரியது) ரூ.900, வெள்ளை வாவல்- ரூ.650, ஊளி-ரூ.350, மத்தி -ரூ.150, இறால்- ரூ.500, புளு நண்டு ரூ.550-க்கு விற்பனையானது.

இதுகுறித்து மீன் வியாபாரிகள் கூறும்போது, கேரளாவில் மீன்பிடி தடைக்காலம் என்பதால் தமிழ்நாட்டில் கடலோர பகுதிகளில் பிடிபடும் பெரிய மீன்கள் கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் கடல் மீன்கள் விலை உயர்ந்துள்ளது. இந்த மாதம் 31-ந் தேதிக்கு பிறகு கேரளாவில் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைகிறது. அதன் பிறகு கோவைக்கு மீன் வரத்து அதிகரிக்கும். அப்போது மீன் விலை குறையும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்