சிவகாசி அணிக்கு முதல் பரிசு

சிவகாசி அணிக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.

Update: 2023-08-28 19:45 GMT

சிவகாசி, 

விருதுநகர் வி.எச்.என். செந்திக்குமார நாடார் கல்லூரியும், சிவகாசி வாக்கர்ஸ் கூடைப்பந்தாட்ட கழகமும் இணைந்து விருதுநகரில் மாவட்ட அளவிலான கூடைபந்து போட்டியை நடத்தியது. இதில் சிவகாசி, விருதுநகர், தளவாய்புரம், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 10 அணிகள் கலந்து கொண்டன. இறுதிபோட்டியில் சிவகாசி வாக்கர்ஸ் அணியும், விருதுநகர் வாக்கர்ஸ் அணியும் மோதியது. இதில் 68-க்கு 54 என்ற புள்ளி கணக்கில் சிவகாசி அணி வெற்றி பெற்றது. சிவகாசி அணிக்கு கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்