லோடு வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதி தீயணைப்பு வீரர் பலி
சிவகிரி அருகே லோடு வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தீயணைப்பு வீரர் பலியானார்.
சிவகிரி:
சிவகிரி அருகே ராமநாதபுரம் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அழகுமுத்து மகன் விக்னேஷ் (வயது 27). இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் தீயணைப்பு வீரராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை. இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் தென்காசி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிவகிரி அம்பேத்கர் சிலை அருகில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு சாலையோரம் பழுதாகி நின்ற லோடு வேன் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த விக்னேஷை சிகிச்சைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.