தீ தடுப்பு பயிற்சி வகுப்பு
ஒப்பிலியப்பன் கோவிலில் தீ தடுப்பு பயிற்சி வகுப்பு நடந்தது.
திருவிடைமருதூர்;
திருநாகேஸ்வரத்தில் ஒப்பிலியப்பன் வெங்கடாசலபதி கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த திருப்பணி நடைபெற்று வருகிறது. இதையைாட்டி திருவிடைமருதூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மாறன் தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி குழுவினர் ஒப்பிலியப்பன் கோவில் பணியாளர்களுக்கு தீ தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த பயிற்சி வகுப்பை நடத்தினர். கோவில் உதவி ஆணையர் சு. சாந்தா முன்னிலையில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் கோவில் பணியாளர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். பயிற்சி வகுப்பில் எதிர்பாராத விபத்து ஏற்படும் போது எவ்வாறு துரிதமாக செயல்படுவது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.