தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.;

Update:2023-10-07 00:45 IST

மயிலாடுதுறை;

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, வருவாய்துறை ஆகிய துறைகள் சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு மற்றும் தீ தடுப்பு முன்எச்சரிக்கை குறித்த ஒத்திகை நிகழ்ச்சி கலெக்டர் மகாபாரதி முன்னிலையில் நடந்தது. பேரிடர் காலங்களில் எவ்வாறு மீட்பு பணிகளில் ஈடுபடுவது? என தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும் கட்டிட இ்டிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு தேவையான முதலுதவி சிகிச்சை அளித்தல், தீ விபத்து ஏற்படும் போது அதிலிருந்து அவர்களை மீட்டு முதலுதவி அளித்தல், நெடுஞ்சாலையில் மரங்கள் விழுந்தால் அதை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தல் போன்றவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா, உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் சீனிவாசன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜகணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்