திருச்செந்தூர் கோவிலில் தீயணைப்பு துறையினர் ஆய்வு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தீயணைப்பு துறையினர் ஆய்வு செய்தனர்.;

Update:2023-09-10 00:15 IST

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்பு கருதி தூத்துக்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் மனோ பிரசன்னா தலைமையில் உதவி மாவட்ட அலுவலர் ராஜீ, திருச்செந்தூர் நிலைய அலுவலர் ராஜமூர்த்தி ஆகியோர் தீ தணிக்கை ஆய்வு செய்தனர். தீ இடர்பாடு அபாயம் உள்ள இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் கோவில் அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து விளக்க உரை மற்றும் ஒத்திகை பயிற்சிகளும் செய்து காண்பிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கார்த்திக் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்